பாஜக எம்.எல்.ஏ மீது முட்டை வீச்சு... பரபரப்பு வீடியோ வெளியாகி அதிர்ச்சி
பெங்களூருவில் பாஜக எம்.எல்.ஏ மீது முட்டை வீசப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பிறந்தநாளை பங்கேற்க சென்ற போது, பாஜக எம்.எல்.ஏ முனிரத்னாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து சிலர் கோஷமிட்டனர். அவர்கள் மீது புகார் அளிக்க எம்.எல்.ஏ தரப்பு முடிவு செய்த நிலையில், காரில் செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தினர். எனினும், அதனை கேட்காமல் எம்.எல்.ஏ முனிரத்னா நடந்து சென்றபோது, மர்ம நபர்கள் அவர் மீது முட்டையை வீசி உள்ளனர். இந்த காட்சி வேகமாக பரவி வரும் நிலையில் ராஜராஜேஸ்வரி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story