குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து.. முப்படை தளபதி பிபின் ராவத் மரணத்தில் பரபரப்பை கிளப்பும் புதிய தகவல்

x

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து மனிதத் தவறுகளால் தான் நிகழ்ந்தது என்று அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.குன்னூரில் கடந்த 2021ம் ஆண்டு முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் உள்ளிட்டோர் பயணித்த ஹெலிகாப்டர் நொறுங்கி விபத்திற்குள்ளானது. மனிதத் தவறுகளால் தான் விபத்து நிகழ்ந்தது என நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பாதுகாப்புத்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய விமானப்படை ஜனவரி 2022ல் வெளியிட்ட அறிக்கையில் மோசமான வானிலையில் விமானியின் இடஞ்சார்ந்த திசைதிருப்பல் காரணமாக விபத்து ஏற்பட்டது என தெரிவிக்கப்பட்டிருந்தது. இயந்திரக் கோளாறு அல்லது நாசவேலை ஆகியவை விபத்துக்கான சாத்தியமான காரணங்கள் இருக்கலாம் என்ற கூற்றுக்களை விமானப்படை நிராகரித்து இருந்தது... இந்நிலையில் பிபின் ராவத் பயணம் செய்த ஹெலிகாப்டர் விபத்திற்குள்ளானது மனித பிழையால்தான் என்று அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்