யாருமே நினைத்து பார்க்க முடியா கோரம்..துடிதுடித்து பறிபோன 6 உயிர் - நெஞ்சை உலுக்கும் சிசிடிவி காட்சி

x

பெங்களூரில் 6 பேரின் உயிரை காவு வாங்கிய கோர விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது... பெங்களூருவில் நேற்று நடந்த சாலை விபத்தில் கார் மீது லாரி கவிழ்ந்த விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த நெலமங்களா போலீஸார், சிசிடிவி கேமரா காட்சிகளின் அடிப்படையில் நேற்று முதல் விசாரணை நடத்தி வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில், லாரியின் ஓட்டுநர் வேகமாக சென்ற நிலையில், வாகனத்தை வலது பக்கமாக திருப்பியதால் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது தெரியவந்துள்ளது.

மேலும் 20 மணி நேரம் கழித்து அதனுடைய சிசிடிவி காட்சிகள் வெளியாகி இருப்பதால், சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகின்றது.


Next Story

மேலும் செய்திகள்