#BREAKING || சிகரெட் பற்ற வைக்க மறுத்த நண்பன்..! கழுத்தை நெரித்து பெட்ரோல் ஊற்றி எரித்த நண்பர்கள் - வெளியான அதிர்ச்சி சம்பவம்
சிகரெட் பற்ற வைக்க மறுத்த நண்பன் கொலை
பெங்களூரு அடுத்த கோலார் பகுதியில் சிகரெட் பற்ற வைக்க மறுத்த நண்பன் கொலை - அதிர்ச்சி சம்பவம்
கோலார் தாலுகாவின் ஹரட்டி கிராமத்தில் டிசம்பர் 17ஆம் தேதி, பாதி எரிக்கப்பட்ட நிலையில் சடலம் குன்று கண்டெடுக்கப்பட்டது.
முதற்கட்ட விசாரணையில் அந்த சடலம் ஹரட்டி கிராமத்தைச் சேர்ந்த சங்கர் நாக் என அடையாளம் காணப்பட்டது.
போலீசார் தீவிர விசாரணை நடத்த, சங்கர் நாக்- இன் நண்பர்கள் லட்சுமண் மற்றும் கணேஷ் என்பவர்கள் கொலைக்காரர்கள் எனத் தெரியவந்தது.
டிசம்பர் 16ஆம் தேதி சங்கர் நாக், லட்சுமண் மற்றும் கணேஷ் ஆகிய மூன்று பேரும் மது அருந்துவதற்காக பாருக்கு சென்றுள்ளனர்.
ஒரு கட்டத்தில் வாக்குவாதம் சண்டையாக மாறி கணேஷ் மற்றும் லக்ஷ்மன் ஆகியோர் சேர்ந்து பியர் பாட்டிலால் சங்கர் நாக்கின் தலையில் அடித்து, பின்னர் கழுத்தை நெரித்து கொலை செயதுள்ளனர்.
பின்னர் போலீசில் மாட்டிக் கொள்வோமோ என எண்ணி பைக்கில் இருந்து பெட்ரோலை எடுத்து அதை சங்கர் நாக்கு முகத்தில் ஊற்றி பற்ற வைத்துள்ளனர்.
இதில் அவரது முகம் முழுமையாக சிதைந்ததையடுத்து அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.
இதனால் போலீசில் மாட்டிக்கொள்ள மாட்டோம் என அவர்கள் எண்ணி இருந்த நிலையில் போலீசாரின் விசாரணையில் பல்வேறு தொழில்நுட்ப ஆதாரங்களை வைத்து அவர்களை கைது செய்திருந்தனர்.
சாதாரண தீப்பெட்டி காக நடந்துள்ள இந்த கொலை அந்த பகுதியை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.