யாசகம் கேட்டவருக்கு தன்னையே தந்த பெண்... மாட்டை விற்று பிச்சைக்காரருடன் ஓட்டம்
கணவர் மற்றும் 6 குழந்தைகளைத் தவிக்க விட்ட பெண் பிச்சைக்காரருடன் ஓடிய அதிர்ச்சிகர சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது... ஹர்தோயில் ராஜு என்பவரின் 45 வயது மனைவி ராஜேஸ்வரிக்கும் அவர்கள் வீட்டுப்பக்கம் அடிக்கடி யாசகம் பெற வரும் நானே பன்டிட்டுக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் செல்போனில் கள்ளக்காதலை வளர்த்து வந்த நிலையில் மார்க்கெட்டுக்கு செல்வதாக கூறிய ராஜேஸ்வரி, வீட்டில் வளர்த்த எருமையை விற்ற பணத்துடன் நானே பன்டிட்டுடன் சென்றுள்ளார். இதுகுறித்து கணவர் ராஜு போலீசில் புகாரளித்துள்ளார்.
Next Story