இளைஞர் தற்கொலை..சி.ஐ.எஸ்.ஃப் பெண் அதிகாரி மீது புகார்
கர்நாடக மாநிலம் மங்களூருவில் உள்ள விடுதியில்,
வடமாநில இளைஞர் தற்கொலை செய்து கொண்டார்.
உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த அபிஷேக் சிங் என்பவர், சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இரு தினங்களுக்கு முன்பு மங்களூரு சென்ற அவர், விடுதி அறையில் தூக்கில் தொங்கியபடி சடலமாக கிடந்தார். தற்கொலைக்கு முன்பு, 20 நிமிட வீடியோவை பதிவு செய்து இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்துள்ளார். அதில், குஜராத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரியாக பணியாற்றி வரும் மோனிகா சிஹாக் என்ற பெண் அதிகாரி , தன்னை திருமணம் செய்வதாகக்கூறி, 8 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஆபரணங்களை வாங்கி மோசடி செய்ததாக குறிப்பிட்டுள்ளார்.
Next Story