வழுக்கை தலை என கேலி செய்த மனைவி -கணவர் தற்கொலை
கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகரில் தலையில் முடி இல்லை என மனைவி கேலி செய்ததால் கணவன் மனமுடைந்து
தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.உடிகாலா பகுதியில் வசித்துp வந்த
பரசிவமூர்த்தி என்பவர் 2 ஆண்டுகளுக்கு முன் மமதா என்பவரை திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் பரசிவமூர்த்தியின் தலைமுடி முழுவதுமாக உதிர்ந்ததால், மனைவி மமிதா, திருமண புகைப்படங்களை பகிர்ந்து அவரை கேலி செய்து,பொய் வழக்கு பதிந்து சிறையில் அடைய செய்ததாக கூறப்படுகிறது. இதனால் பரசிவமூர்த்தி மனைவியின் கொடுமைகளை கடிதமாக எழுதிவைத்து விட்டு தற்கொலை செய்த நிலையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story