"பெங்களூருவில் தலைவிரித்தாடும் தண்ணீர் தட்டுப்பாடு" - துணை முதல்வர் வீட்டிலேயே இந்த நிலையா!
கோடை காலம் துவங்கியுள்ளதால், பெங்களூருவில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இதனால், முதலமைச்சர் சித்தராமையா இல்லத்திற்கு டேங்கர் மூலம் தண்ணீர் கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. பெங்களூரு நகரத்தில் உள்ள பத்தாயிரம் போர்வெல்களில் 35 விழுக்காட்டுக்கும் அதிகமானவை வறண்டு கிடக்கின்றன. தனது இல்லத்திலும் போர்வெல் வரண்டுவிட்டதாக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார். பெங்களூரு நகரில் 20 விழுக்காடு டேங்கர் மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்படுவதால், டேங்கர் லாரிகள் விலையை இரு மடங்காக உயர்த்தியுள்ளன. இதனால், கூடுதலாக போர்வெல்களை திறந்து, டேங்கர்களை வாடகைக்கு அமர்த்தி, தண்ணீரை விநியோகம் செய்ய அரசு முடிவு செய்துள்ளது. அரசு RO பிளாண்ட்களுக்கு வெளியே, பொதுமக்கள் வரிசையில் நீண்ட நேரம் காத்திருந்து குடிநீரை வாங்கிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், மழை வேண்டி, பெங்களூருவில் உள்ள தௌடா கணபதி கோயிலில், பொதுமக்கள் சிறப்பு ஹோம பூஜை நடத்தினர்.