லைவ் வீடியோவில் பெண்ணிடம் பாலியல் அசிங்கம் செய்த 10 வயது சிறுவன் - பார்க்கவே கண்கூசும் வீடியோ
பெங்களூரு ஐடி சிட்டி பகுதியில் வசிக்கும் நேஹா பிஸ்வால் என்பவர் செவ்வாய்க்கிழமை இரவு தனது சமூக ஊடக பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டார்.அவர் சாலையில் நடந்து சென்ற போது, அவ்வழியாக வந்த சிறுவன் தன்னிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டு விட்டு தப்பி ஓடியதாக அதில் குறிப்பிட்டு இருந்தார்.இது
குறித்து நேஹா போலீசில் புகார் அளிக்கவில்லை. இந்த வீடியோ குறித்த தகவல் கிடைத்ததும், பெங்களூரு போலீசார் நேஹாவை தொடர்பு கொண் போது அவர் புகார் அளிக்க மறுத்துவிட்டார்.
பெங்களூரு காவல்துறைக்கு நன்றி தெரிவித்து நேஹா மற்றொரு வீடியோவை பதிவிட்டுள்ளார். அந்த சிறுவன் மீது எந்த வழக்கும் பதிவு செய்ய விரும்பவில்லை எனவும் ஆனால் அவர் எதிர்காலத்தில்
இது போன்று செய்யாமல் இருக்க போலீசார் அவரை பிடித்து கண்டிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.அந்த சிறுவனுக்கு 10 முதல் 11 வயது இருக்கும் என்றும், அந்த பகுதியின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தால் அவனை அடையாளம் கண்டுபிடிக்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
பெங்களூரு போலீசார் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.