பெங்களூர் டூ தூத்துக்குடி.. மூட்டை மூட்டையாக புகையிலை கடத்தல்... 3 பேரை தட்டி தூக்கிய போலீஸ்

x

பெங்களூர் டூ தூத்துக்குடி.. மூட்டை மூட்டையாக புகையிலை கடத்தல்... 3 பேரை தட்டி தூக்கிய போலீஸ்

பெங்களூரில் இருந்து அரசு பேருந்து மூலமாக கோவில்பட்டிக்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களைக் கடத்தி வந்த நடத்துனர் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில், நெடுஞ்சாலை போக்குவரத்து போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுப்பாராஜ் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பெங்களூரில் இருந்து திருநெல்வேலி செல்லும் அரசு பேருந்து, இளையரசனேந்தல் மேம்பாலத்தின் கீழே நின்று கொண்டிருந்தது. அந்த பேருந்தில் இருந்து நான்கு சாக்கு மூட்டைகளை 2 பேர் இறக்கி கொண்டிருந்தனர்.

அதைப் பார்த்து சந்தேகம் அடைந்த போலீசார், அந்த 4 மூட்டைகளையும் சோதனை செய்தபோது, அதில், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் இருந்தது தெரியவந்தது. அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், இளையரசனேந்தலில் பெட்டிக்கடை நடத்தி வரும் அகஸ்டின்ராஜ் மற்றும் கரிசல்குளத்தைச் சேர்ந்த ராமசுப்பு ஆகிய இருவரும் பெங்களூரில் இருந்து அரசு பேருந்து மூலம் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களைக் கடத்தி வந்து வியாபாரம் செய்து வந்தது தெரியவந்தது. இவர்களுக்கு உடந்தையாக பேருந்து நடத்துனரான தாழையூத்து குருஞ்சிகுளத்தை சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவர் செயல்பட்டதும் தெரிய வந்தது. இதையடுத்து, நடத்துனர் பாலசுப்ரமணியன் உட்பட 3 பேரையும் போலீசார் கைது செய்து, மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்