பெங்களூருவில் தமிழக பெண் கூட்டு பலாத்காரம் - தாலியை பறித்து நிகழ்த்திய கொடூரம்

x

பெங்களூருவில் பேருந்துக்காக காத்திருந்த 37 வயது பெண்ணை, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த‌ 2 பேரை போலீசார் கைது செய்தனர். தமிழகத்தை சேர்ந்த பெண் ஒருவர், 19ம் தேதி இரவு 11.30 மணிக்கு, கே.ஆர்.நகர் பகுதியில் எலகங்கா பகுதிக்கு செல்வதற்காக, பேருந்து நிறுத்தம் குறித்து விசாரித்துள்ளார். அவருக்கு உதவுவதாக கூறி அழைத்துச் சென்ற 2 பேர், கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த‌துடன், தாலி செயின், செல்போன் மற்றும் பணத்தை பறித்துக்கொண்டு தப்பியோடினர். பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்த‌தை அடுத்து விசாரணை நடத்திய போலீசார், கணேஷ் மற்றும் ஷர்வன் ஆகிய கூலித் தொழிலாளிகளை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்