பெங்களூர் ஏர்போர்ட் குடிநீர் குழாயில் கசிந்த நீர் - உடனே பறந்த விளக்கம்
பெங்களூர் கெம்ப கவுடா சர்வதேச விமான நிலையத்தின், டெர்மினல் 2 பகுதியில் குடிநீர் குழாயில் சிறிய கசிவு ஏற்பட்டது. இதனால் சில விமான சேவை அலுவலகங்களில் குழாயிலிருந்து கசிந்த தண்ணீர் புகுந்ததாக கூறப்படுகிறது. ஆனால், இந்தப் பிரச்சனை உடனடியாக சரி செய்யப்பட்டுவிட்டதாக விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த பிரச்சனை காரணமாக விமான சேவையில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் தண்ணீர் புகுந்த விமான சேவை நிறுவன அலுவலகங்களுக்கு தற்காலிகமாக இடம் வழங்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் விளக்கம் அளித்துள்ளது. இந்த தனிப்பட்ட சம்பவத்தால் ஏற்பட்ட சிரமங்களுக்கு மன்னிப்பும் கோரப்பட்டது.
Next Story