வழுக்கை தலை ஆண்களே குறி... அரங்கேறிய விபரீதம்... கும்பல் நிகழ்த்திய சம்பவம்... பரபரப்பு வீடியோ
உத்தரபிரதேசத்தில், வழுக்கை தலையில் முடி வளர வைப்பதாக கூறி எண்ணெய்யை விற்று மோசடியில் ஈடுபட்ட மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மீரட்டில் தற்காலிக முகாம் அமைத்த மூன்று பேர் பல மூலிகைப் பொருட்களை விற்று வந்தனர். அதில், வழுக்கை தலையில் முடி வளர வைப்பதாக கூறி எண்ணெயும் விற்பனை செய்யப்பட்டது. முகாம் உள்ளே சென்று பார்க்க பொதுமக்களிடம் 20 ரூபாய் நுழைவுக் கட்டணம் வசூலித்ததுடன், அந்த எண்ணெய் 300 ரூபாய்க்கு விற்கப்பட்டது. அதனை தேய்த்த சிலருக்கு தலையில் அரிப்பும், ஒவ்வாமை காரணமாக காயமும் ஏற்பட்டது. இதுகுறித்து, பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின்பேரில், போலி எண்ணெய் விற்ற இம்ரான், சல்மான், சமீர் ஆகியோரை காவல் துறையினர் கைது செய்தனர். இந்த எண்ணெயை விற்றவர்களில் ஒருவரின் தலை வழுக்கையாகவே இருந்தது குறிப்பிடத்தக்கது.
Next Story