150 அடியில் துடிக்கும் பிஞ்சு இதயம்.. கேமராவில் அசையும் கை, தலை.. பார்த்து கதறும் பெற்றோர் - எப்படி மீட்பது என தெரியாமல் திணறல்
ராஜஸ்தானில் ஆழ்துளை கிணற்றில் விழுந்து 3 நாட்களாக உயிருக்கு போராடி வரும், மூன்றரை வயது சிறுமியை மீட்க முடியாமல் மீட்புப் படையினர் திணறி விருகின்றனர். கோட்புட்லி-பெஹ்ரோர் மாவட்டத்தில் உள்ள படியாலி கிராமத்தில், திங்கட்கிழமை வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த செட்னா என்ற சிறுமி, அங்கு மூடப்படாமல் இருந்த 700 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் விழுந்துள்ளது. சுமார் 150 ஆழத்தில் சிக்கியுள்ள சிறுமியை மீட்க, தீயணைப்புத்துறையினர், தேசிய பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர். 2 வாரங்களுக்கு முன்பு டவுசா மாவட்டத்தில் 5 வயது சிறுவன் ஆழ்துளை கிணற்றில் விழுந்து, 55 மணி நேரத்திற்குப் பிறகு மீட்கப்பட்டும் உயிரிழந்துள்ள நிலையில், 3 நாட்களாகியும் சிறுமியை மீட்கும் பணியில் முன்னேற்றம் இல்லாததால், பெற்றோர் கவலை அடைந்துள்ளனர்.
Next Story