புயலை கிளப்பிய அதானி விவகாரம்.. 3 வது நாளாக நாடாளுமன்றம் ஒத்திவைப்பு

x

நாடாளுமன்ற குளிர்க்கால கூட்டத் தொடரின் 3வது நாள் கூட்டம் மக்களவை, மாநிலங்களவையில் இன்று தொடங்கியது. அதானி மீதான நிதி முறைகேடு விவகாரம் மணிப்பூர், உத்தரப்பிரதேச மாநிலம் சம்பல் கலவரம் குறித்து விவாதிக்க வலியுறுத்த இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் கோஷங்களை எழுப்பினர். அவை தலைவர்களின் பேச்சை ஏற்க மறுத்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், இரு அவைகளும் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் தொடங்கிய போது, எதிர்க்கட்சி எம்.பிக்கள், அதானி விவகாரத்தை எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். இதைதொடர்ந்து, இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன. நாடாளுமன்றத்தில் குளிர்க்கால கூட்டத்தொடர், 3வது நாளாக எந்த அலுவலும் நடைபெறாமல் முடங்கியது.


Next Story

மேலும் செய்திகள்