அசாமில் இருந்து ரயிலில் வந்த `போதை’ - ஈரோடு ஸ்டேஷனில் தட்டி தூக்கிய போலீஸ்...

x

ர​யில் மூலம் கேரளாவுக்கு ஹெராயின் கடத்திய அசாமை சேர்ந்த இருவரை ஈரோடு மதுவிலக்கு போலீசார் கைது செய்து, 48 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஹெராயினை பறிமுதல் செய்தனர்.

அசாம் மாநிலம் திப்ருகரில் இருந்து கன்னியாகுமரி வரை செல்லும் விரைவு ரயில் முன்பதிவு பெட்டியில் போதைப்பொருள் கடத்துவதாக, ஈரோடு ரயில்வே பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில், ஈரோடு ரயில் நிலையம் வந்தடைந்த ரயிலில், குறிப்பிட்ட முன்பதிவு பெட்டியில் போலீசார் சோதனை செய்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான இருவரது உடைமைகளை சோதனை செய்தபோது, அதில்

48 கிராம் ஹெராயின் இருந்தது தெரியவந்தது.

இதனை ரயில்வே பாதுகாப்பு படை போலீசார், ஈரோடு மதுவிலக்கு போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து மது விலக்கு போலீசார் நடத்திய விசாரணையில், அசாம் மாநிலத்தை சேர்ந்த ஹசானுஜமால், அசாதுள் இஸ்லாம் ஆகிய இருவர், கேரள மாநிலம் ஆலுவா வரை விரைவு ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்