பவன் கல்யாணை சந்திக்க நிர்வாணமாக வந்த நாகசாது - பரபரப்பு காட்சி
ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணை நேரில் சந்திக்க அவருடைய கட்சி அலுவலகத்திற்கு நிர்வாணமாக சென்ற அகோரினி நாகசாதுவால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது... எங்கு சென்றாலும் நிர்வாணமாக தோன்றுவது தான் அகோரினி நாக சாதுவின் வழக்கம்...
ஒரு வாரத்திற்கு முன்பு கூட காளஹஸ்தி கோவிலுக்கும் நிர்வாணமாக சென்ற நாகசாதுவை அங்கிருந்த பாதுகாப்பு ஊழியர்கள் பிடித்து அவருக்கு ஆடை அணிவித்து கோவிலுக்குள் அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் இன்று விஜயவாடாவில் ஜனசேனா கட்சி அலுவலகம் இருக்கும் பகுதிக்கு நிர்வாணமாக சென்ற நாகசாது தான் துணை முதல்வர் பவன் கல்யாணை நேரில் சந்திக்க வந்திருப்பதாக கூறினார்.
ஆனால் துணை முதல்வர் இங்கு இல்லை. அவரை இப்போது சந்திக்க இயலாது என்று பாதுகாப்பு ஊழியர்கள் தடுத்து நிறுத்தி எடுத்துக் கூறியும் அவர் கேட்காமல் நடுரோட்டில் உட்கார்ந்து போராட்டம் நடத்த ஆரம்பித்து விட்டார். இதனால் பெரும் பரபரப்பு நிலவியது...