திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரணய கலக உற்சவம் கோலாகலம் | Tirupati | Ezhumalayan Temple
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசிக்கு 6-வது நாள் பிரணய கலக உற்சவம் நடைபெறுகிறது. கோபத்தில் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களை மலையப்ப சுவாமி சமாதானப்படுத்துவதற்காக இந்த உற்சவம் நடைபெறுகிறது. இதையொட்டி ஸ்ரீதேவி பூதேவி தாயார்கள் பல்லக்கில் எழுந்தருளி ஏழுமலையான் கோயில் தெப்பக்குளத்தின் அருகே வந்தனர்.
பின்னர் மலையப்ப சுவாமி தரப்பில் ஜீயர்கள் நான்காயிரம் திவ்ய பிரபந்தம் பாடியும், புராண இதிகாசம் படித்தும் தாயார்களை சமாதானபடுத்தினர்.
ஸ்ரீதேவி, பூதேவி தாயார் தரப்பினர் 3 முறை பூ பந்துகளை மலையப்ப சுவாமி மீது வீசியும், அதில் இருந்து தப்பிக்க மலையப்ப சுவாமி தரப்பினர் பின்னால் செல்லும் சம்பிரதாய உற்சவமும் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Next Story