அண்ணன், தம்பிக்கு எமனாக மாறிய கணவனை பிரிந்த அக்கா - போட்ட ஸ்கெட்சை கேட்டால் குலை நடுக்கம்

x

ஆந்திர மாநிலம், பல்நாடு மாவட்டம் நகரிகல்லு யானாதி காலனியை சேர்ந்த அரசு ஆசிரியரான பவுலிராஜூ என்பவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மனைவி உயிரிழந்துவிட்ட நிலையில், திருமணம் செய்து கொடுத்த மூன்று பிள்ளைகளும் தங்களது துணைகளைப் பிரிந்து தந்தையுடனே வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக பவுலிராஜு உயிரிழந்துள்ளார். இதை அடுத்து பிள்ளைகளுக்கு இடையே சொத்து குறித்து தகராறு ஏற்பட்ட நிலையில், மகள் கிருஷ்ணவேணி சொத்துக்காக அண்ணன் தம்பியை கொலை செய்திருப்பது தற்போது தெரியவந்துள்ளது. கடந்த நவம்பர் 26 ஆம் தேதி தம்பி துர்காராம கிருஷ்ணாவை ஆற்றுக் கால்வாயில் தள்ளியும், டிசம்பர் 10ஆம் தேதி அண்ணன் கோபி கிருஷ்ணாவை அளவுக்கு அதிகமாக மது குடிக்க வைத்து, பிறகு துப்பட்டாவல் கழுத்து நெரித்தும் கிருஷ்ணவேணி கொலை செய்துள்ளார். இருவரது உடல்களும் இன்னும் அடையாளம் காணப்படாத நிலையில், இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தனி ஆளாக கிருஷ்ணவேணி கொலை செய்திருக்க முடியாது. என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்