கடனுதவி-பச்சைக் கொடி காட்டிய உலக வங்கி | Andhrapradesh | loan | ThanthiTV

x

ஆந்திரப் பிரதேசத்தின் புதிய தலைநகரான அமராவதியின் வளர்ச்சிக்கு நிதியளிக்க உலக வங்கி பச்சைக்கொடி காட்டியுள்ளது. வேலைவாய்ப்புகள், எதிர்கால தலைமுறையினருக்கான வாழ்க்கைத் தர மேம்பாடு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு அமராவதியை நவீனகரமான நகரமாக மாற்ற நிதி கோரப்பட்டிருந்த நிலையில், 6 ஆயிரத்து 700 கோடி ரூபாய் கடனுதவி வழங்க உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. அமராவதி இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்படக்கூடாது என்றும், ஆந்திராவின் வளர்ச்சி மையமாக இருக்க வேண்டும் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. இந்தக்கடனை 29 ஆண்டுகளில் திருப்பிச் செலுத்த வேண்டும்...மேலும் கூடுதல் அவகாசம் 6 ஆண்டுகள் வரையில் வழங்கப்படும்...


Next Story

மேலும் செய்திகள்