பார்சலில் வந்த அழுகிய ஆண் சடலம்..! உடன்பில் இருந்த துண்டு கடிதம்.. படித்தும் மிரண்டுபோன பெண் - ஆந்திராவில் திகில் சம்பவம்..

x

மேற்கு கோதாவரி மாவட்டம் எண்டகண்டி கிராமத்தை சேர்ந்த துளசி என்பவர், தனியார் அறக்கட்டளை ஒன்றின் உதவியுடன், இலவச வீட்டு மனையில் வீடு கட்டி வருகிறார். வீட்டிற்கு தேவையான மின் உபகரணங்கள், டைல்ஸ் உள்ளிட்ட பொருட்களை அறக்கட்டளையை சேர்ந்தோர் பார்சல் மூலம் அனுப்பி வந்துள்ளனர். இந்நிலையில், பார்சல் ஒன்றில் பாதி அழுகிய நிலையில் ஆண் சடலம் வந்தது கண்டு அதிர்ச்சியடைந்த துளசி, அதனுடன் ஒரு கோடியே 36 லட்ச ரூபாய் கேட்டு கடிதம் மூலம் அவருக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பதற்றமடைந்தார். புகாரின் பேரில் சடலத்தை கைப்பற்றிய போலீசார், துளசிக்கு பார்சல் அனுப்பிய நபர் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்