அமித்ஷா தொகுதியில் தொற்றிய பரபரப்பு - எதிர்த்து இறங்கிய வேட்பாளர்கள் கதறும் வைரல் வீடியோ
- அமித்ஷா தொகுதியில் தொற்றிய பரபரப்பு - எதிர்த்து இறங்கிய வேட்பாளர்கள் கதறும் வைரல் வீடியோ
- மத்திய அமைச்சர் அமித்ஷா போட்டியிடும் தொகுதியில் போட்டி வேட்பாளர்கள் வேட்புமனுவை வாபஸ் பெற செய்ய அழுத்தம் கொடுக்கப்பட்டதாக வெளியாகியிருக்கும் தகவல் குறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு
- மத்திய அமைச்சர் அமித்ஷா... குஜராத் மாநிலம் காந்திநகர் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். காந்திநகர் இப்போது அல்ல... வரலாற்றில் பெரும்பாலும் நட்சத்திர வேட்பாளர் தொகுதியாகவே இருந்து வருகிறது. தொகுதி வரலாற்றை பார்க்கையில்... 1989 முதல் பாஜகவே வெற்றிப்பெற்று வருகிறது.
- முன்னாள் பிரதமர் வாஜ்பாய் போட்டியிட்டு வென்ற தொகுதியில் நீண்டகால எம்.பி.யாக இருந்தார் அத்வானி. அவரையடுத்து காந்தி நகரில் போட்டியிட்டு வருகிறார் அமித்ஷா.. கடந்த தேர்தலில் 5 லட்சத்து 57 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை வசமாக்கினார்.
- இப்போது அவரை 10 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற செய்வோம் என பாஜகவினர் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள். தொகுதியில் காங்கிரஸ் சார்பில் சோனால் படேல் களமிறக்கப்பட்டு இருக்கிறார்.
- இதற்கிடையே சின்ன கட்சியை சேர்ந்த வேட்பாளர்கள், சுயேட்சைகள் என 16 வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுவை வாபஸ் பெற்றிருக்கிறார்கள். இப்போது அவர்களில் சிலர் மிரட்டப்பட்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
- சுயேட்சையாக களமிறங்கிய ஜிதேந்திர சவுகான் என்பவர் வேட்புமனுவை திரும்ப பெறுமாறு அமித் ஷாவின் ஆட்கள் மிரட்டியதாக கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி யிருக்கிறது.
- தனக்கு மூன்று மகள்கள் இருப்பதாகவும்... அவர்களுடைய நலன் கருதி போட்டியிலிருந்து விலகிவிட்டேன் என சவுகான் கூறியதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
- ஆனால்.. பாஜக தரப்பில் இதுபோன்ற குற்றச்சாட்டுக்கள் மறுக்கப்பட்டு இருக்கிறது. இதற்கிடையே தொகுதியில் 3 வேட்பாளர்கள் வலுக்கட்டாயமாக நிர்பந்திக்கப்பட்டு வேட்புமனுவை வாபஸ் வாங்க செய்யப்பட்டிருக்கிறார்கள் என வெளியாகியிருக்கும் செய்தியை பகிர்ந்து... தேர்தல் ஆணையம் காணாமல் போய்விட்டதா என கேள்வியை எழுப்பியிருக்கிறார் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண்...
Next Story