மூளைச்சாவு அடைந்து கவலைக்கிடம்.. அல்லு அர்ஜுன் தலையில் விழுந்த அடுத்த பேரிடி

x

மூளைச்சாவு அடைந்து கவலைக்கிடம்.. அல்லு அர்ஜுன் தலையில் விழுந்த அடுத்த பேரிடி

புஷ்பா2 திரைப்படத்தின் பிரீமியர் ஷோ கூட்ட நெரிசலில் சிக்கி படுகாயமடைந்த சிறுவன் மூளைச்சாவு அடைந்து கவலைக்கிடமாக உள்ளார்.ஐதராபாத்தில் கடந்த 4ஆம் தேதி சந்தியா திரையரங்கில் புஷ்பா-2 படத்தின் பிரீமியர் ஷோ திரையிட்ட போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ரேவதி என்ற பெண் உயிரிழந்தார். அவரது 9 வயது மகன் ஸ்ரீதேஜ் மற்றும் மகள் படுகாயமடைந்தனர். கிம்ஸ் மருத்துவமனையில் சிறுவன் ஸ்ரீதேஜுக்கு செயற்கை சுவாசம் மூலம் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஐதராபாத் காவல் ஆணையர் சி.வி.ஆனந்த் மற்றும் தெலங்கானா மாநில சுகாதாரத்துறை செயலாளர் கிறிஸ்டினா ஆகியோர், அரசு சார்பில் மருத்துவமனைக்கு சென்று, சிறுவனின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காவல் ஆணையர் ஆனந்த், மூச்சுத்திணறல் காரணமாக ஸ்ரீதேஜ் மூளைச்சாவு அடைந்துள்ளதாகவும், குணமடைய நீண்ட காலம் ஆகும் என்றும் தெரிவித்தார். மருத்துவர்கள் குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், விரைவில் குணமடைவார் என நம்புவதாகவும் சுகாதாரத்துறை செயலாளர் கிறிஸ்டினா கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்