நாளை காலை தொடங்குகிறது 'ஏரோ இந்தியா' ஷோ | Aero India

x

பெங்களூருவில் உள்ள எலஹங்கா (Yelahanka) விமானப்படை தளத்தில், நாளை காலை 'ஏரோ இந்தியா' நிகழ்ச்சி தொடங்க உள்ளது. 14ஆம் தேதி வரை 5 நாட்கள் நடைபெறும் சாகச நிகழ்ச்சியை, ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் லிமிட்டேட் மற்றும் டிஆர்டிஓ உடன் இணைந்து இந்திய பாதுகாப்புத்துறை நடத்துகிறது. இதில், ரஷ்யா, அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, இஸ்ரேல், இங்கிலாந்து உட்பட 25 நாடுகளின் ஆயுத தளவாட தயாரிப்பு நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. இந்தியாவின் உள்நாட்டு தயாரிப்பு விமானங்கள், ஹெலிகாப்டர்கள், ரஷ்யாவின் சு57 (su57), அமெரிக்காவின் எஃப்35 (F35) உட்பட பல்வேறு அதிநவீன போர் விமானங்களும் பங்கேற்றுள்ளன. சாகச நிகழ்ச்சிக்கு தயார் நிலையில் உள்ள விமானங்கள் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.


Next Story

மேலும் செய்திகள்