அம்பானிக்கு அதிர்ச்சி கொடுத்த அதானி
முகேஷ் அம்பானியை முந்திய கெளதம் அதானி, ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரராக மீண்டும் உருவெடுத்துள்ளார்.
அதானி குழுமம், அடுத்த பத்தாண்டுகளில் 7.47 லட்சம்
கோடி ரூபாய் அளவுக்கு புதிய முதலீடுகளை செய்ய
உள்ளதால், அதன் பங்குகள் வெகுவாக அதிகரிக்க உள்ளதாக அமெரிக்காவின் ஜெஃப்ரிஸ் ஆய்வு நிறுவனம் கூறியிருந்தது. இதன் விளைவாக, வெள்ளியன்று 10 அதானி குழும நிறுவனங்களின் பங்கு விலைகள் 14 சதவீதம் அதிகரித்து, 84 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு அவற்றின் மதிப்பு உயர்ந்தது. இதனால் கெளதம் அதானியின் சொத்து மதிப்பு 9.22 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்து, ஆசிய பணக்காரர்கள் வரிசையில் முதலிடத்தை பிடித்துள்ளார். கடந்த ஒரு ஆண்டில் அவரின் சொத்து மதிப்பு 2.22 லட்சம் கோடி ரூபாய்
அளவுக்கு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஆசிய மற்றும் இந்திய பணக்காரர்கள் வரிசையில் முதலிடத்தில் இருந்த முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு தற்போது 9.05 லட்சம் கோடி ரூபாயாக உள்ளதால், அவர் இரண்டாம் இடத்திற்கு சரிந்துள்ளார்.