முடிவெடுத்த கெஜ்ரிவால்... டெல்லியில் மொத்தமாக சீனை மாற்றிய ஆம் ஆத்மி - உற்றுநோக்கும் I.N.D.I.A.

x

டெல்லி மாநில சட்டப்பேரவைக்கு ஓரிரு மாதங்களில் பொதுத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் மூன்றாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

35 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், முன்னாள் முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால், புதுடெல்லி சட்டப்பேரவை தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார்.

டெல்லி முதல்வர் அதிஷி மீண்டும் கால்காஜி தொகுதியில் போட்டியிடுகிறார். ஆம் ஆத்மி கட்சியின் மூத்த அமைச்சர் சத்தியந்திர ஜெயின், ஷக்கூர் பஸ்தி தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்