ஒரு கொலைக்கு பழிதீர்க்க 5 கொலைகள்.. ஊரே மரண ஓலம்.. கொடூரத்தின் உச்சம் - போர்க்களமான உ.பி கிராமம்

x
  • உத்தரபிரதேசத்தின் ருத்ராபூர் பகுதியில் உள்ள ஃபதேபூர் கிராமத்தில் இந்த சோக சம்பவம் அரங்கேறியுள்ளது.
  • முன்னாள் மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் பிரேம் யாதவ் குடும்பத்தினருக்கும், சத்யபிரகாஷ் துபே என்பவரின் குடும்பத்தினருக்கும் இடையே நீண்ட நாட்களாக இடப்பிரச்சினை தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
  • இந்த விவகாரத்தில் மீண்டும் பிரச்சினை எழவே, முன்னாள் மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் பிரேம் யாதவ், சத்யபிரகாஷ் துபேயின் வீட்டிற்கு சென்று தகராறு செய்துள்ளார். அப்போது ஆத்திரமடைந்த சத்யபிரகாஷ் துபேயின் குடும்பத்தினர் தாக்கியதில், பிரேம் யாதவ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
  • இந்த விவகாரம் பிரேம் யாதவ்வின் குடும்பத்தினருக்கு தெரியவர, அதிர்ச்சியில் உறைந்துபோன அவர்கள், சம்பவ இடத்திற்கு வந்து வன்முறையை கட்டவிழ்த்து விட்டது கிராமத்தையே பதற்றத்துக்கு உள்ளாக்கியது.
  • பிரேம் யாதவ்வை கொலை செய்ததற்கு பழிக்குப்பழியாக, சத்யபிரகாஷின் வீட்டை முற்றுகையிட்ட கும்பல், அவர்கள் வீட்டை எரித்ததுடன், கண்ணில் பட்ட வீடுகளையும் எரித்ததாக சொல்லப்படுகிறது.
  • அப்போது இருதரப்பும் துப்பாக்கி, கூரிய ஆயுதங்கள் உள்ளிட்டவற்றால் ஒருவரை ஒருவர் கண்மூடித்தனமாக தாக்கிக் கொண்டதில், சத்யபிரகாஷ் துபேவை எதிர்தரப்பினர் கொலை செய்தனர்
  • ஆனாலும் ஆத்திரம் தீராத அந்த கும்பல், சத்யபிரகாஷ் துபேயின் குடும்பத்தை சேர்ந்த 2 சிறுவர்கள், பெண் உட்பட 4 பேரையும்
  • ஈவு இரக்கமின்றி கொடூரமாக கொலை செய்தனர்
  • இதனால் அந்த இடமே போர்க்களம் போல் காட்சியளிக்க, அக்கம்பக்கத்தினர் அச்சத்திலும், அதிர்ச்சியிலும் உறைந்து போயினர்.
  • இந்த கொலை சம்பவம் குறித்த தகவல் போலீசாருக்கு தெரியவரவே, அசம்பாவிதங்களை தடுக்க பெரும் போலீஸ் படை சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டது.
  • ஆனால், போலீசாருக்கு வன்முறை நடக்க இருந்தது தெரிந்தும் கூட, அதனை தடுத்து நிறுத்தாமல், வேடிக்கை பார்த்ததாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியிருப்பதும் ஒருபுறம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
  • இந்த சம்பவத்தால், வன்முறையில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்த நிலையில், தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
  • இந்த வன்முறை சம்பவத்தை அறிந்த உத்தரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தேவையான உதவிகளை வழங்கவும், விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கவும் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்