தனி ஒருவனாய் குழந்தைகள் உட்பட `100' பேரை மீட்ட `ஹீரோ'" மக்கள் தேவையாற்றும் IT ஊழியர்
மினி படகு ஆர்டர் செய்து வெள்ள மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர் ஐடி ஊழியர் ஒருவர்...
பள்ளிக்கரணை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மழை வெள்ளம் இன்னும் வடியாத நிலையில், வெள்ளத்தில் சிக்கியவர்களுக்கு படகு மூலம் குடிநீர், டீ, பிரட், குழந்தைகளுக்கு பால், டயாப்பர்கள் உள்ளிட்டவற்றை தன்னார்வலர்களாக தனது குழுவுடன் இணைந்து பணியாற்றி வருகிறனர் நங்கநல்லூரைச் சேர்ந்த ஐடி ஊழியர் லட்சுமி நாராயணன்... தன்னிடம் உள்ள மினி படகு மூலமாக கடந்த 3 தினங்களில் வயதானவர்கள் குழந்தைகள் என கிட்டத்தட்ட 100 பேரை மீட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்... இதேபோல் குரோம்பேட்டையைச் சேர்ந்த மற்றொரு ஐடி ஊழியரான பாலமுரளியும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தன்னால் ஆன உதவிகளை செய்து வருகிறார்...
Next Story