மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (26-11-2024) | 4PM Headlines | Thanthi TV | Today Headlines

x

கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து நிவாரண முகாம்களை தயார் நிலையில் வைத்திருக்க அதிகாரிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தல்....

தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை முன்கூட்டியே நிவாரண முகாம்களுக்கு அழைத்து செல்ல உத்தரவு...

சுரங்கப் பாதைகள், மேம்பாலங்களின் கீழ்ப்பகுதியில் தண்ணீர் தேங்கியிருந்தால் பேருந்துகளை மாற்று வழியில் இயக்க வேண்டும்...

புயல் எச்சரிக்கையை தொடர்ந்து, தொலைதூர பேருந்து ஓட்டுநர்களுக்கு அரசு விரைவு போக்குவரத்து கழகம் அறிவுறுத்தல்...

கனமழை எச்சரிக்கை எதிரொலியாக வரும் 28, 29ம் தேதிகளில் முதலமைச்சர் ஸ்டாலின் விழுப்புரத்தில் கள ஆய்வு மேற்கொள்ள இருந்த பயணம் ரத்து...

அரசு நிகழ்ச்சி, கள ஆய்வுக் கூட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு...

28 மற்றும் 29ம் தேதிகளில் சென்னை, கடலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் அதிகனமழை பெய்யும்....

தென்மேற்கு வங்கக்கடலில் 60 கிலோ மீட்டர் முதல் 90 கிலோ மீட்டர் வேகம் வரை காற்று வீசும் என எச்சரிக்கை...

நாளை கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும்...

தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தகவல்...


Next Story

மேலும் செய்திகள்