காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (26.12.2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines

x

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் பிரியாணி கடை உரிமையாளர் ஞானசேகரன் சிறையில் அடைப்பு....

கைதான நபர் பல பெண்களிடம் தவறாக நடந்து கொண்டவர் என்பதும், பல வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் பரபரப்பு தகவல்..............


அண்ணா பல்கலைக்கழக வளாகத்திலேயே மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியளிப்பதாக தவெக தலைவர் விஜய் கண்டனம்....

குற்றவாளிகளுக்கு விரைவில் தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்றும் வலியுறுத்தல்.......


ராஜஸ்தானில் 700 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3வயது சிறுமியை மீட்க தொடரும் போராட்டம்............

மூன்று நாட்களாகியும் மீட்க முடியாததால், சிறுமியின் நிலை தெரியாமல் குடும்பத்தினர் வேதனை....


சென்னையில் சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத் துறை அதிகாரி எனக் கூறி கோடிக்கணக்கில் மோசடி செய்த இளைஞர் கைது...

13 வங்கி கணக்குகளை தொடங்கி பணத்தை சுருட்டியதாகவும், நாடு முழுவதும் 135 வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் அதிர்ச்சி தகவல்...


சென்னையில் புத்தாண்டையொட்டி ஆபத்தான முறையில் ரேஸ் ஓட்டினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என போலீசார் எச்சரிக்கை...

தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகம் வாயிலாக கண்காணிப்பதாகவும் தகவல்...


Next Story

மேலும் செய்திகள்