இரவு 9மணி தலைப்புச் செய்திகள் (26-11-2024) | 9PM Headlines | Thanthi TV | Today Headlines
கடலூர், மயிலாடுதுறை, நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை...
புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் நாளை விடுமுறை அறிவிப்பு...
நாகை, திருவாரூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்றே வெளுத்து வாங்கிய கனமழை...
தரங்கம்பாடி அரசு மருத்துவமனை வளாகத்தில் குளம் போல் தேங்கிய மழைநீரால் நோயாளிகள் அவதி...
கனமழை முன்னெச்சரிக்கை தொடர்பாக திருவாரூர், நாகை, கடலூர் உள்ளிட்ட மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஆலோசனை...
நிவாரண முகாம்களை தயாராக வைத்திருக்க உத்தரவு...
மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் எனவும் அறிவுறுத்தல்...
வங்கக்கடலில் நாளை உருவாகிறது ஃபெங்கல் புயல்...
கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை அதி கனமழை பெய்யும் என எச்சரிக்கை...
தென்மேற்கு வங்கக்கடலில் 60 கிலோ மீட்டர் முதல் 90 கிலோ மீட்டர் வேகம் வரை காற்று வீசக்கூடும் என தகவல்...