சர்வதேச சமையல் - Chinese Crispy Honey Prawns நம்ம வீட்டு கிச்சனில் ஃபாரின் ரெசிபி...

x

சர்வதேச சமையல்ல இன்னைக்கு நாம வெளுத்து கட்ட போர ரெசிபி Chinese Crispy Honey Prawns...

நம்ம எந்த ஒரு விசயம் பண்ணாலும் அதுக்கு எதிர்மாறா இந்த சீனாகாரங்க பண்ணுவாங்க... அந்த கொள்கைய சாப்பாட்டுல விசயத்துல கூட விட்டு வைக்கலங்குறதுக்கு எக்ஸாம்பில் தான் இந்த Chinese Crispy Honey Prawns.

நம்மளாம் இறால் வாங்குனா குழம்பு, தொக்கு, பிரைனு கார சாரமா தான் சமைப்போம்... ஏனா அப்போ தான் நமக்கு சோறு விழுக்குனு உள்ள இறங்கும்... பட்... அதே இறால வச்சு தேன ஊத்தி இனிப்பான ரெசிபியா பண்றது தான் இந்த ரெசிபியோட ஹைலைட்டே...

தேன்ல இறால்லா... ?

ஆகா... இந்த வர்த்தைய கேட்டதுமே காதுகுள்ள தேன் பாயுதே... சாப்ட்டு பாத்தா எப்டி இருக்கும்... சரி வாங்க அதையும் தான் ட்ரை பண்ணி பாத்துடுவோம்...

Chinese Crispy Honey Prawns... சமைக்க தேவையான பொருட்கள்... இறால் , தேன், உப்பு, கார்ன் பிளார் மாவு, முட்டை, தண்ணீர், பேக்கிங் பவுடர், எண்ணெய், குல்கோஸ் சிரப், சோயா சாஸ், எள், வெங்காயதாள் அவ்வளோ தான் இனி சமையளை ஸ்டார்ட் பண்ணிடலாம்...

முதல்ல ஒரு பாத்திரத்துல16 இறால் துண்ட போட்டு.. அடுத்து அது மேல அரை ஸ்பூன் உப்ப பர பரனு தூவி... கூடவே ஒரு முட்டையயும் உடைச்சு ஊத்திக்கோங்க... முக்கியமான விசயம் முட்டைய உடைச்சு ஊத்தும் போது... வெள்ள கருவ மட்டும் ஊத்துங்க... இப்போ பாத்துரத்துல போட்ட மொத்தத்தையும் மிக்ஸ் பண்ணி ஒரு 10 நிமிஷம் ஊற வச்சுக்கோங்க...

அடுத்து ஒவ்வொரு இறாலையும் கார்ன்பிளார் மாவுல போட்டு பொரட்டி தனியா எடுத்து வச்சுக்கோங்க...

நெக்ஸ்ட்டு வேற ஒரு பாத்திரத்துல ஒரு கப் கார்ன்பிளார்மாவு, 1 ஸ்பூன் பேக்கிங் சோடா, அரை ஸ்பூன் உப்பு இந்த மூனையும் போட்டு நல்லா மிக்ஸ் பண்ணி ஒரு அறை மணி நேரம் ஃபிரிட்ஜ்ல வச்சு எடுத்து... அதுல அரை கப் தண்ணிய ஊத்தி நல்லா மாவு பதத்துக்கு மிக்ஸ் பண்ணிடுங்க...

சமையலின் அடுத்த கட்டமா முதல்ல ரெடி பண்ணி வச்ச இறால்ல ஒவ்வொண்ணையும் இந்த மாவுல முக்கி எடுத்து... நல்லா கொதிக்குற எண்ணெய்ல போட்டு பொன்நிறத்துல பொரிச்சு எடுத்துகோங்க... இது மாதிரி எல்லா இறாலையும் பொரிச்சு தனியா எடுத்து வச்சுக்கோங்க...

அடுத்து சூடேறுன பாத்திரத்துல அரை கப் தேன் , ரெண்டு ஸ்பூன் குல்கோஸ் சிரப், அரை ஸ்பூன் சோயா சாஸ் இது எல்லாத்தையும் போட்டு நல்லா கொதிக்க விட்டு... அந்த சூட்டோட சூடா... பொரிச்சு வச்ச இறால் மேல ஊத்தி... எல்லா பக்கமும் தேன் சாருற மாதிரி நல்லா மிக்ஸ் பண்ணா... Chinese Crispy Honey Prawns ரெடி....

இருங்க இருங்க உடனே சாப்பிடஅவசர படுவீங்களே... பைனல் டச்சா... ரெசிபி மேல பொடி பொடியா நறுக்குன வெங்காய தாளையும்... எள்ளு பொடிய தூவி விட்டு இப்போ சாப்டுங்க... சும்மா வேற லெவல்ல இருக்கும்...

அப்புறம் என்ன இந்த சண்டேய Chinese Crispy Honey Prawns சமைச்சு என்ஜாய் பண்ணுங்க...


Next Story

மேலும் செய்திகள்