2 நாய்களை தூக்கிலிட்டு கொலை செய்த 20 பேர் மீது வழக்கு
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அடுத்த கோவில் மேட்டு புதூரில் மரத்தில் தூக்கில் தொங்கவிட்டு கொலை செய்யப்பட்ட இரண்டு நாய்களை பற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. புகாரின் அடிப்படையில் மூலனூர் காவல்துறையினர் 20 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஆடுகளை நாய்கள் கடித்து கொன்றதால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் நாய்களை தூக்கிட்டு கொன்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் 20 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்ய காரணமாக இருந்த சமூக ஆர்வலர் நாகராஜ் இருசக்கர வாகனத்தில் சென்ற போது மர்ம நபர்கள் கீழே தள்ளிவிட்டதால் காயமடைந்து, சிகிச்சை பெற்று வருகிறார்.
Next Story