சிவலிங்கத்தை குளத்தில் வீசி சென்றதால் பரபரப்பு - காரணம் என்ன?

x

சிவலிங்கத்தை குளத்தில் வீசி சென்றதால் பரபரப்பு - காரணம் என்ன?

கடலூர் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் அருகே பழமை வாய்ந்த சிவன் கோயிலின் சிவலிங்கத்தை மர்ம நபர்கள் குளத்தில் வீசி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஸ்ரீமுஷ்ணத்தை அடுத்த பாளையங்கோட்டை மேல்பாதியில் உள்ள பழமை வாய்ந்த சிவன் கோயிலின், சிவலிங்கம் சந்தைக்கு அருகில் உள்ளது. இந்த சிவலிங்கத்தை பொதுமக்கள் வழிப்பட்டு வந்த நிலையில், கார்த்திகை தீப சிறப்பு பூஜைக்குப் பிறகு காணவில்லை. இதுகுறித்து பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு, அருகில் உள்ள குளத்தில் இருந்து சிவலிங்கத்தை மீட்டனர். இதையடுத்து, சிவலிங்கத்தை குளத்தில் வீசியவரை கண்டுபிடிக்க கோரி அப்பகுதி மக்கள் சாலையில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்க்களிடம், காவல் துறை மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, குற்றவாளிகளை கைது செய்வதாக உறுதி அளித்ததன் பேரில் அவர்கள் கலைந்து சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்