பலாத்கார புகார்... அக்ரிமெண்ட்-ஐ காட்டி கோர்டையே அதிர வைத்த இளைஞர்... கடைசியில் ட்விஸ்ட்

x

திருமணம் செய்து கொள்ளாமல் இருவரும் 2024 ஆகஸ்ட் ஒன்று முதல் 2025 ஜூன் 30 வரையில் ஒன்றாக வாழ்வோம். திருமணம் செய்து கொள்ளாமல் வாழும் இந்த காலத்தில் இருவரும் ஒருவர் மீது ஒருவர் பாலியல் துன்புறுத்தல் வழக்குகளை கொடுக்கக்கூடாது, அமைதியாக தங்கள் நேரத்தை செலவிட வேண்டும். ஆணின் வீட்டிலேயே பெண் இருக்க வேண்டும். இணைந்து வாழும் போது ஆணின் நடத்தை சரியாகயில்லை என்றால், ஒரு மாத காலம் நோட்டீஸ் கொடுத்துவிட்டு எந்த நேரத்திலும் பிரிந்துவிடலாம். பெண்ணின் உறவினர்கள் இருவரும் தங்கியிருக்கும் வீட்டிற்கு வரக்கூடாது. உறவில் இருக்கும் பெண், ஆணுக்கு எந்தவிதமான தொல்லைகளையும் மன வேதனையையும் ஏற்படுத்தக்கூடாது. இணைந்திருக்கும் காலக்கட்டத்தில் பெண் கருவுற்றால் அதற்கு ஆண் பொறுப்பேற்க கூடாது என்று ஆறாவது ஷரத்து சொல்கிறது. உறவின் போது ஆணுக்கு மன உளைச்சலை உண்டாக்கி, அதனால் அவனது வாழ்க்கையை பாழாக்கினால், அதற்கு அந்த பெண்ணே பொறுப்பாவாள் என்று கூறுகிறது. இந்த ஒப்பந்தத்தையே மும்பை நபர் நீதிமன்றத்தில் காட்டியிருக்கிறார்...


Next Story

மேலும் செய்திகள்