முத்துமலை முருகன் கோயிலில் நடிகர் யோகிபாபு சாமி தரிசனம்

x

சேலம் மாவட்டம் புத்திர கவுண்டம்பாளையத்தில் உள்ள முத்துமலை முருகன் கோயிலில் நடிகர் யோகிபாபு சாமி தரிசனம் மேற்கொண்டார். உலகிலேயே மிக உயரமான 146 அடி உயரம் கொண்ட முருகன் சிலையை, யோகிபாபு மனமுருகி வேண்டினார். தொடர்ந்து பன்னீர் அபிஷேகம் செய்து தியான மண்டபத்தில் தியானம் செய்த அவர், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கி தானும் உணவருந்தி சென்றார்.


Next Story

மேலும் செய்திகள்