"கணவரிடம் கடைசியாக பேசிய வார்த்தை" சித்ரா ரூம்லயே தந்தை எடுத்த முடிவு.. கதறி துடித்த சித்ராவின் தாய்

x

மறைந்த சின்னத்திரை நடிகை சித்ராவின் தந்தை காமராஜ் தனது மனைவியுடன் சென்னை திருவான்மியூரில் வசித்து வந்தார். ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளரான இவர், சித்ரா இறந்த பின் மன உளைச்சலில் இருந்து வந்ததாக தெரிகிறது. சித்ராவின் அறையிலேயே காமராஜ் தினமும் தூங்கிவந்த நிலையில், அதிகாலை 4 மணி அளவில் அவருடைய மனைவி விஜயா குடிக்க பால் வேண்டுமா என கேட்டுள்ளார். அதற்கு வேண்டாம் என பதில் அளித்து விட்டு காமராஜ் தூங்கியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், காலை 7 மணி அளவில் விஜயா, அறைக்கதவை திறந்து பார்த்த போது மகளின் துப்பட்டாவால் காமராஜ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். காமராஜ் உடல் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்