12 வருட காத்திருப்பு - ஒருவழியாக அறிவிக்கப்பட்ட ‘மதகஜராஜா’ ரிலீஸ் தேதி
பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருந்த மதகஜராஜா திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. சுந்தர் சி இயக்கத்தில் விஷால், வரலட்சுமி, அஞ்சலி நடிப்பில் விஜய் ஆண்டனி இசையில் 2013ல் உருவான இத்திரைப்படம் சில காரணங்களால் ரிலீஸ் ஆகாமல் தள்ளிக்கொண்டே போனது. இறுதியாக 2024 ஆம் ஆண்டு வெளியாகும் என கூறப்பட்டிருந்தது. ஆனால் மீண்டும் தள்ளிப்போனது. இந்த சூழலில் தற்போது பொங்கல் ட்ரீட்டாக வர உள்ளதாக பட குழுவினர் அறிவித்துள்ளனர். ஜனவரி 12ம் தேதி மதகஜராஜா திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
Next Story