விஷால் விவகாரம் - ஒன்று திரண்ட நடிகர் சங்கம்.. சிக்கலில் பிரபல யூடியூப் சேனல்கள்
நடிகர் விஷால் மற்றும் நடிகர் சங்க உறுப்பினர்கள் குறித்து அவதூறு பரப்பும் வகையில் வீடியோ வெளியிட்ட யூடியூப் சேனல்கள் மீது தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது...
மதகஜராஜா படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் விஷால் உடல்நலக் குறைவால் கை நடுக்கத்துடன் காணப்பட்டார்... யூடியூபர் சேகுவேரா, விஷால் மதுவிற்கும், மாதுவுக்கும் அடிமையாகிவிட்டதால் தான் கை நடுக்கம் ஏற்பட்டுள்ளதாக யூ டியூபில் வீடியோ வெளியிட்டார். மேலும் நடிகர் சங்க உறுப்பினர்கள் குறித்தும் அவதூறு பரப்பும் வகையில் பேசியுள்ளார். இந்நிலையில், விஷால் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாகக் கூறி, அவதூறு பரப்பும் வகையில் பேசிய யூடியூபர் சேகுவாரா மற்றும் அதனை ஒளிபரப்பிய 2 யூடியூப் சேனல்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரளிக்கப்பட்டுள்ளது.
Next Story