வசூலில் சொல்லி அடித்த படம் ..விஜயின் "கில்லி" re-release -ரசிகர்கள் உற்சாகம்

x

நடிகர் விஜய் நடிப்பில் 20 வருடங்களுக்கு முன்பு வெளியான கில்லி திரைப்படம் மறு வெளியீடு செய்யப்பட்டுள்ள நிலையில் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.... தரணி இயக்கத்தில் வேலுவாக விஜய், தனலட்சுமியாக த்ரிஷா, முத்துப்பாண்டியாக பிரகாஷ் ராஜ் கலக்கிய கில்லி திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது... எப்போது பார்த்தாலும் சலிக்காத கதைக்களம், விஜய் பிரகாஷ் ராஜின் அசத்தலான நடிப்பு, வித்யாசாகரின் அதிரடியான பாடல்கள் என படத்தின் சிறப்பம்சங்களை சொல்லிக் கொண்டே போகலாம்... "எவர் கிரீன்" படமான கில்லி மறு வெளியீடு செய்யப்பட்டுள்ளதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்...


Next Story

மேலும் செய்திகள்