விஜய்-ஐ பார்த்தாக வேண்டும் எனப் பரிதவிக்கும் அப்பாவி சிறுவன்...சிறுவன் நிலையைக் கண்டு கண்கலங்கும் குடும்பம் - கண்டு கொள்வாரா விஜய்?

x

தவெக மாநாட்டுக்கு நிலம் தந்த விவசாயிகளுக்கு விருந்து வழங்கப்படும் சூழலில், தமிழக வெற்றி கழகத்தின் தலைமை அலுவலகத்தின் வாசலிலேயே ஒரு சிறுவன்

காத்திருக்கிறார்..

எப்படியும் பிகில் ராயப்பனுக்காக விஜய்யை நேரில் பார்த்தே ஆக வேண்டும் என மும்பை, டெல்லி, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் சுற்றிவரும் சிறுவனின் குடும்பத்தினரின் சோகம் மனதை ரணமாக்கி உள்ளது.

ராயப்பன் கதாபாத்திரம் உண்மை என நம்பி, அவரது இறப்பிற்கு எப்படியும் விஜயிடம் ஆறுதல் கூறத் தவிக்கும் சிறுவன் தான், அமான். 16 வயதே ஆன, இவர் திருச்சி மாவட்டம் சிறுகனூர் ஊராட்சியைச் சேர்ந்தவர்.

இரவில் ஒரு நாள் பதினோரு மணியளவில் வீட்டில் விஜய் நடித்த பிகில் படத்தைப் பார்த்து இருக்கிறான்.அப்போது, ராயப்பன் என்ற கதாபாத்திரத்தைக் கொல்வதாக இடம்பெற்ற காட்சியைக் கண்டு அதிர்ச்சியடைந்து இருக்கிறான்.

தொடர்ந்து நானும் போகிறேன்.. போய் விஜய்யைப் பார்த்து அவருக்கு ஆறுதல் சொல்ல வேண்டும் எனக் கூறிக்கொண்டே இருந்ததாக விவரிக்கிறார், அவரது பாட்டி பாத்திமா...

அமான் பிறக்கும் போதே உடல் நிலை மிக மோசமடைந்து சாவின் விளிம்பு வரை சென்ற உயிர் பிழைத்து இருக்கிறான். மன வளர்ச்சி குன்றி காணப்பட்ட சிறுவனைச் சிறப்புப் பள்ளிகளில் படிக்க வைத்து சிரமப்பட்டு வளர்த்து வருவதாகக் கூறுகிறார், பாத்திமா.

விஜய்யைப் பார்க்கப் போகிறேன்..என்றும் தினமும் ஊர் ஊராக அலைந்து திரியும் தனது பேரனின் ஆசையை நிறைவேற்றும் விதமாக, விஜய்யைச் சந்திக்க அனுமதித்தால், அவனது மனம் மாறலாம்.. என நம்பிக்கை வைத்திருப்பதாகக் கூறுகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்