"`வாழை’ என் கதை".. பரபரப்பை கிளப்பிய சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர்

x

என்னை வாழ வைக்கவில்லை வாழை - எழுத்தாளர் சோ.தர்மன் ஆதங்கம்

தன் இளம் வயது வாழ்க்கை அனுபவங்களையும், வாழ்வியல் சூழ்நிலைகளையும் வைத்து இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கி இருக்கும் திரைப்படம்தான் வாழை..

திரையரங்குகளில் கடந்த 23 ஆம் தேதி வெளியான இத்திரைப்படம், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது...

கதைக்கு உரிமை கோர போவதில்லை - எழுத்தாளர் சோ.தர்மன்

இந்நிலையில், நான் அச்சு ஊடகத்தில் எழுதி வெளியிட்ட வாழையடி என்ற கதையை, மாரி செல்வராஜ் காட்சி ஊடகத்தில் அப்படியே வெளியிட்டிருப்பதாக எழுத்தாளர் சோ.தர்மன் தெரிவித்திருக்கிறார்.... விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்வைத்து இவர் எழுதிய சூல் என்ற நாவல் 2019ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருது பெற்றது..

இதனிடையே வாழை படத்தின் கதைக்காக மாரி செல்வராஜ் தன்னிடம் உரிமை கோரவில்லை எனவும், இதனை தான் பெரிதாக்க விரும்பவில்லை எனவும் கூறியிருக்கிறார் சோ.தர்மன்கரிசல் இலக்கிய எழுத்தாளரான எனக்கு வாழை பற்றி எதுவும் தெரியாது எனவும், என் சகோதரர்... இயக்குநர் மாரி செல்வராஜ் ஊரான புளியங்குளம் அடுத்த பொன்னங்குறிச்சியில்தான் பெண் எடுத்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்...

இந்நிலையில், விடுமுறையில் புளியங்குளம் செல்லும் போது, அங்கு சிறுவர்கள் வாழை சுமப்பதை பார்த்து கதை எழுதியதாகவும் கூறுகிறார்....

மாரி செல்வராஜூக்கு முன்பே, சுமார் 10 வருடங்களுக்கு முன்னால்... இந்த கதையை அச்சு ஊடகத்தில் கொண்டு வந்து தாக்கம் ஏற்படுத்தியது நான் தான் என்றும் பெருமையோடு கூறுகிறார் சோ. தர்மன்...

எழுத்தாளர் சோ.தர்மனின் இந்த பேச்சு பேசு பொருளாகி இருக்கும் நிலையில், நடந்த வரலாற்றையும், மக்கள் சந்தித்த வலிகளையும் யாரும் உரிமை கோர முடியாது என சமூக வலைதளத்தில் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்...


Next Story

மேலும் செய்திகள்