அதிர்வுகளை கிளப்பிய டொவினோ தாமஸ் - மலையாள கரையில் அடுத்த `பாம்'

x

பெண்களிடம் அத்துமீறுபவர் யாராக இருந்தாலும், அவர்களுக்கு தண்டனை நிச்சயம் என சொல்லியிருக்கிறார் மலையாள பிரபல நடிகர் ஒருவர்.. யார் அவர்? பார்க்கலாம் விரிவாக..

மலையாள திரையுலகைக் கடந்த இரண்டு வாரத்துக்கும் மேலாக ஹேமா கமிட்டியின் "அறிக்கைபுயல் " புரட்டிப் போட்டு வருகிறது.

சூப்பர் ஸ்டார்களே தன்னிலை விளக்கம் கொடுக்கு அளவுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது இந்த சம்பவம்...

இது தொடர்பாக சமீபத்தில் பெரிதும் பேசப்பட்ட ஆடு ஜீவிதம் பட நடிகர் பிருத்திவிராஜ் பாலியல் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை அளிக்க வேண்டும் என காட்டமாகத் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் மலையாள திரையுலகில் தனக்கென தனி இடம் பிடித்து ..வளர்ந்து வரும் மற்றொரு நடிகர் இந்த விவகாரத்தில் குரல் கொடுத்து இருக்கிறார்.

எந்த திரையுலக பின்னணியும் இல்லாமல் மலையாள திரையுலகில் கடந்த 2012ம் ஆண்டு பிரபுவின்டே மக்கள் என்ற பட மூலம் அறிமுகமானார். அடுத்த ஆண்டு வெளியான ஏபிசிடி படம் மூலம் கேரள திரையுலகின் கவனத்தைப் பெற்றார். அதன் பின்பாக நடித்த அனைத்து படங்களிலும் தனக்கான கதாபாத்திரத்தைத் தேர்ந்தெடுத்து வித்தியாசமான நடிப்பால் பாராட்டுக்களை பெற்றார்.

இந்த நிலையில் ஹேமா கமிட்டி அறிக்கை குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு டொவினோ தாமஸ் அளித்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..

பாலியல் பிரச்சினை மலையாள திரையுலகில் மட்டும் தான் நடக்கிறது என்று சொல்வதிலோ அல்லது திரையுலகில் மட்டும் தான் நடக்கிறது என்று கூறி விட முடியாது என்று கூறிய டொவினோ தாமஸ் பணியிடங்களில் தொடங்கி பல இடங்களிலும் இந்த பிரச்சனை இருக்கிறது என்று சொல்லியிருக்கிறார்..

இது போன்ற பிரச்சினைகளை ஒரே நாளில் தீர்த்துவிட முடியாது என்றாலும் ஹேமா கமிட்டி அதனை தொடங்கி வைத்து இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார். நடிகைகளிடம் அத்துமீறியவர்கள் கண்டிப்பாகத் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்றும் கொந்தளித்திருக்கிறார் டொவினோ தாமஸ்..

எதிர்காலத்தில் இது போன்ற செயல்களைச் செய்வதற்குத் துணிவே வரக்கூடாது, அந்த அளவிற்கு நடிகர்கள் உட்பட பொது மக்களிடத்திலும் மன மாற்றம் ஏற்பட வேண்டும் என்றார். குழந்தைகள், பெண்கள், ஆண்கள் என அனைவரும் பணியிடத்தில் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வதே சிறந்த மன மாற்றம் என சொல்லியிருக்கிறார் டொவினோ தாமஸ்.

இவர் மலையாள நடிகர் சங்கமான அம்மாவின் நிர்வாகி என்பதும் குறிப்பிடத்தக்கது. மோகன்லால் தொடங்கி நிவின்பாலி வரை சர்ச்சைகள் நீண்டு வரும் சூழலில் டொவினோ தாமஸின் இந்த பேச்சு பலரையும் கவனிக்க வைத்திருக்கிறது..


Next Story

மேலும் செய்திகள்