ஆனந்த யாழை மீட்டிய அற்புத கவிஞன்... நா.முத்துக்குமார் நினைவு தினம் இன்று...

x

கவிஞர் நா.முத்துக்குமாரின் நினைவுதினம் இன்று...

இறந்தும் ரசிகர்கள் இதயங்களில் வாழும் மாபெரும் கவிஞன்...

பாடல் வரிகளால் மனங்களை இறக்கை கட்டி பறக்கச் செய்தவர்...

வலிகளை கரையச் செய்து வரிகளில் சுகம் காண வைத்தவர்...

கைவிடப்பட்ட மனங்களை ஆரத்தழுவிய நா.மு-ன் பாடல்கள்

"சாம்பல் கரையும் வார்த்தை கரையுமா"...

ஆயிரத்து 500 பாடல்களுக்கு மேல் எழுதி பல விருதுகளைப் பெற்ற பாடலாசிரியர் நா.முத்துக்குமாரின் நினைவுதினம் இன்று... தன் பாடல் வரிகளால் ரசிகர்களின் இதயங்களில் இசையோடு கலந்த அவரைப் பற்றிய ஒரு சிறப்பு செய்தித் தொகுப்பு...

நா.முத்துக்குமார்... சொற்களுக்குள் உயிர் புகுத்தி... உணர்வூட்டி... கவிதை என பெயர் வைத்து... நம் வலிகளை மெல்லமாய் வருடச் செய்து... ரணங்களை ஆற்றி... புண்ணியக் கணக்குகளை மட்டுமே சேர்த்துச் சென்ற மாபெரும் கவிஞன்...

பறவையே எங்கு இருக்கிறாய்... பறக்கவே என்னை அழைக்கிறாய்... என்ற வரிகளின் மூலம் கேட்பவர் மனதை சிறகடித்துப் பறக்கச் செய்தவர் நா.முத்துக்குமார்...

அரும்பாய் முளைக்கும் காதலை காட்டாற்று வெள்ளமாய் மாற்றும் சக்தி நா.முத்துக்குமாரின் வரிகளுக்குண்டு...

(நேற்று பார்த்த நிலவா என்று நெஞ்சம் என்னைக் கேட்கிறதே பூட்டி வைத்த உணர்வுகள் மேலே புதிய சிறகு முளைக்கிறதே...இது என்ன உலகம் என்று தெரியவில்லை...விதிகள் வரை முறைகள் புரியவில்லை...இதய தேசத்தில் இறங்கி போகையில் இன்பம் துன்பம் எதுவும் இல்லை) + (ஒரு வண்ணத்துப் பூச்சி எந்தன் வழி தேடி வந்தது..)

காதலைக் கொண்டாட காதலர்களுக்கு வரி அமைத்து... கவிதை சமைத்து... மகிழ்ச்சியில் திளைக்க வைத்திருப்பார் நா.முத்துக்குமார்...

(சொல்ல வந்த வார்த்த...சொன்ன வார்த்த...சொல்லப்போகும் வார்த்த யாவும் நெஞ்சில் இனிக்குதே...என்னை என்ன கேட்ட என்ன சொன்னேன்...)-மச்சான் மச்சான் பாடல்

காதல் தோல்வியா... கவலை வேண்டாம்... இருக்கவே இருக்கிறது நா.முத்துக்குமாரின் பாடல்கள் என்று அமர்ந்து விட்டால் போதும்... உங்கள் வலிகளை கண்ணீராய் கரையச் செய்து வரிகளில் சுகம் காண வைத்து விடுவார்...

(காட்டிலே காயும் வெளிச்சம்...கண்டு கொள்ள யாருமில்லை... கண்களின் அனுமதி வாங்கி காதலும் இங்கே வருவதில்லை)

காதல் வேண்டுமானால் உங்களைப் புறக்கணிக்கலாம்... கைவிடப்பட்ட மனங்களை ஆரத்தழுவ என்றுமே அவரின் வரிகள் மறப்பதில்லை...

(புன்னகை செய்தால் உயிர் வாழ்வேன்...புறக்கணித்தால் நான் என்னாவேன்...உன் உதட்டுக்குள் இருக்கும் ஒரு வார்த்தை அதை சொல்லி விட்டால் போதும் என் வாழ்க்கை)

ஆனந்த யாழை மீட்டுகிறாய்... என்ற பாடலைக் கேட்கும் போதெல்லாம்... இதயத்தில் அமர்ந்து இனிமையாய் யாழ் மீட்டிக் கொண்டிருப்பார் நா.மு...

(ஆனந்த யாழை மீட்டுகிறாய்)

தோல்வியில் துவண்டு கிடக்கும் போதெல்லாம்... புது உத்வேகம் அளித்து... மலையானாலும் தூக்கிப் பந்தாடச் செய்யும் வலிமை தருபவை நா.முத்துக்குமாரின் பாடல்கள்...

(கரை வரும் நேரம் பார்த்து கப்பலில் காத்திருப்போம்...எரிமலை வந்தால் கூட ஏறி நின்று போர் தொடுப்போம்...அந்த தெய்வ ரகசியம் புரிகிறதே...இங்கு எதுவும் நிலை இல்லை கரைகிறதே...மனம் வெட்ட வெளியிலே அலைகிறதே)

நா.முத்துக்குமார் மறைந்து வருடங்கள் ஓடி விட்டன... ஆனால் தினம் தினம் தேடித் தேடி கேட்கும் பாடல் வரிகளின் வாயிலாக ஒவ்வொரு நொடியும் உயிர்ப்புடன் அல்லவா வாழ்ந்து வருகிறார், அந்த மகா கவிஞன்...



Next Story

மேலும் செய்திகள்