தனி விரோதம் இல்லை..பொடி வைத்து பேசிய ரேவந்த் ரெட்டி | Allu Arjun | Revanth
ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 26ஆம் தேதி வீர பாலகர் தினமாக மத்திய அரசால் கொண்டாடப்படுகிறது. கலை, கலாச்சாரம், வீரம், கண்டுபிடிப்பு, அறிவியல் தொழில்நுட்பம், சமூக சேவை, விளையாட்டு, சுற்றுச்சூழல் ஆகிய 7 பிரிவுகளில் சாதனைகள் புரிந்த குழந்தைகளுக்கு மத்திய அரசு பிரதமரின் ராஷ்டிரிய பால் புரஸ்கார் விருதை வழங்குகிறது. இந்த ஆண்டு 14 மாநிலங்கள்
மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 7 சிறுவர்கள் 10
சிறுமிகள் உட்பட மொத்தம் 17 குழந்தைகள் இந்த விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தேர்ந்தெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு
குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று நடைபெற்ற விழாவில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு விருதுகளை வழங்கினார். விருது பெறும் ஒவ்வொருவருக்கும் பதக்கம், சான்றிதழ், பாராட்டுப்
பத்திரம் வழங்கப்பட்டது. தமிழகத்திலிருந்து செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த ஜனனி நாராயணன் என்ற 14 வயது சிறுமிக்கும் விருது வழங்கப்பட்டது. விருது பெற்ற குழந்தைகள் டெல்லியில் அடுத்த மாதம் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பு நிகழ்ச்சியில்
கலந்து கொள்ள உள்ளனர்.