"என்னால் மறக்க முடியாத நாள்.." உருக்கமாக பேசிய நடிகர் விக்ரம் | Actor Vikram

x

திருச்சியில் தனியார் கல்லூரி மாணவர்களோடு, தங்கலான் படக்குழுவினர் கலந்துரையாடினர். வருகிற15ம் தேதி படம் ரிலீசாக உள்ள நிலையில், புரமோசன் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருச்சியில் தனியார் கல்லூரியில் மாணவ, மாணவியர்களிடம் படக்குழுவினர் கலந்துரையாடினார். அப்போது, என் மகன் துருவ் விக்ரம், அப்பா போன்று இருப்பார், நான் மகனைப் போன்று இருப்பேன் என்று கூறினார். உடற்பயிற்சி கூடத்தில் பார்த்தால் ஹாய் என்று சொல்லி கிளம்பி விடுவார் என்று கலகலப்பாக பேசினார். தொடர்ந்து மாணவர்களுடன் நடிகர் விக்ரம் மற்றும் நடிகை மாளவிகா ஆகியோர் செல்பி எடுத்துக் கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்