வருகிற 25ஆம் தேதி 'சூர்யா 44' டைட்டில் டீசர் வெளியீடு

x

சூர்யா 44’ படத்தின் தலைப்புடன் கூடிய ‘டைட்டில் டீசர்’ வருகிற 25-ம் தேதி வெளியாகிறது. கங்குவா’ படத்துக்குப் பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தில் சூர்யா நடித்துள்ளார். இதில் பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ், ஜெயராம் உட்பட பலர் நடித்துள்ளனர். ஸ்ரேயா ஒரு பாடலுக்கு நடனமாடிய நிலையில், படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. படத்தின் ‘டைட்டில் டீசர்’ வருகிற 25-ம் தேதி வெளியாகும் என ரஜினியின் ‘தளபதி’ படத்தின் ஐகானிக் போஸ்டரை நினைவூட்டும் வகையில் படக்குழு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்