வான்டடாக வம்பிழுத்த சர்ச்சை இயக்குனர்... சூப்பர் ஸ்டாரின் ஸ்டைலிலேயே ரசிகர்கள் பதிலடி

Mute
Mute
Current Time 0:00
/
Duration Time 0:00
Loaded: 0%
Progress: 0%
0%
0:00
Stream TypeLIVE
Remaining Time -0:00
 
Technical info
  • Duration [sec]: 0.000
  • Position [sec]: 0.000
  • Current buffer [sec]: 0.000
  • Downloaded [sec]: 0.000
Issue report sent
Thank you!
x

மூன்று தலைமுறைகள் இவருடைய படங்களை தினமும் கொண்டாடி கொண்டிருக்கிறார்கள்.

துணை நடிகராக அறிமுகமாகி, வில்லனாக மிரட்டி, அதன்பிறகு சூப்பர் ஸ்டாராக நான்கு தசாப்தங்களுக்கு மேல் நிலைத்து நிற்கிறார் என்றால் அதற்கு ஒரே காரணம் இவருடைய ஸ்டைல்லான நடிப்பு மட்டுமே.

துணை நடிகராக அறிமுகமாகி, வில்லனாக மிரட்டி, அதன்பிறகு சூப்பர் ஸ்டாராக நான்கு தசாப்தங்களுக்கு மேல் நிலைத்து நிற்கிறார் என்றால் அதற்கு ஒரே காரணம் இவருடைய ஸ்டைல்லான நடிப்பு மட்டுமே.

சாதாரண கன்டக்டராக இருந்து திரையுலகில் நடிகனாக அறிமுகமான காலத்தில் இவர் அளவிற்கு வேறு எந்த நடிகரும் விமர்சனங்களை எதிர்கொண்டிருக்க மாட்டார்கள்.

கருப்பா இருக்கிறவனால ஹீரோ ஆக முடியாதென்கிற பிம்பத்தை தகர்தெறிந்து, எந்த கோடம்பாக்கம் இவரை ரிஜெக்ட் செய்ததோ அதே கோடம்பாக்கத்தில் கெத்தா மாஸ்ஸா என்ட்ரி கொடுத்தவர் தான் ரஜினி .

தமிழ் சினிமாவை நாடறிய உலகறிய செய்த பெருமைக்கு இந்த மூன்றெழுத்து மந்திரம் தான் முக்கிய காரணமென்று சொன்னாலும் அது மிகையாகாது.

மூன்று தலைமுறைகளாக ரசிகர்களை என்டர்டெயின் செய்து கொண்டிருக்கும் கலைஞனை, “ரஜினிகாந்த் சிறந்த நடிகர் இல்லை“ என வாயில் வந்தப்படி விமர்சித்திருக்கிறார் இயக்குனர் ராம் கோபால் வர்மா.சமீபத்தில் அவர் அளித்திருந்த பேட்டியில் “ரஜினிகாந்த் சிறந்த நடிகரா என்று எனக்கு தெரியவில்லை, அவரால் சத்யா திரைப்படத்தின் பிக்கு ஹாத்ரே கதாபாத்திரத்தில் நடிக்க முடியுமா ? என்கிற கேள்வியை எழுப்பிய RGV, ரஜினி ஸ்லோமோஷனில் மட்டுமே நடிக்க முடியுமென விமர்சித்திருக்கிறார்.

ரசிகர்கள் ரஜினியை கடவுளாக பார்க்கின்றனர். ரஜினி பாதி படத்திற்கு ஸ்லோமோஷனில் நடந்து வருவதையே அவர்களும் விரும்புகிறார்கள் என மனம்விட்டு விமர்சனம் செய்திருக்கிறார். ஸ்டார் அந்தஸ்து உள்ளவரை ரஜினியால் ஒருபோதும் நல்ல கதாபாத்திரங்களை தேர்வு செய்ய முடியாதென்று அவருடைய சொந்த கருத்துக்களை பகிர்ந்திருக்கிறார் ராம்கோபால் வர்மா. இயக்குனரின் இந்த பதிலை வரவேற்ற நேர்காணல் நடத்தியவரும் அதை சரியென அமோதித்திருக்கிறார்.

இயக்குனர் RGV-யின் இந்த சர்ச்சைக்குரிய பேட்டி தற்போது ரஜினி ரசிகர்களை கொந்தளிக்க வைத்திருக்கிறது. அதுமட்டுமின்றி , ராம்கோபால் வர்மா அவருடைய பேட்டியில் “என்பது, தொண்ணூறுகளில் ரஜினி, சிரஞ்சிவி போன்ற தென் இந்தியாவிலிருந்த நடிகர்கள் அனைவரும் பாலிவுட் சூப்பர் ஸ்டாரான அமிதாப் பச்சனின் படங்களை காப்பியடித்தே கமெர்ஷியல் ஹிட் கொடுத்ததாகவும் கூறியிருந்தார்.

ஆனால், அமிதாப் பச்சன் சில காலங்களிலயே கமெர்ஷியல் Template-லிருந்து விலகி நல்ல கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டதாகவும், அதேநேரம் தமிழ், தெலுங்கிலிருந்த நடிகர்கள் கமெர்ஷியல் டெம்பிளெட்லயே தொடர்ந்து நடித்துக் கொண்டிருப்பதாகவும் விமர்சித்திருக்கிறார். அதோடு, “KGF திரைப்படம் போன்றதொரு மோசமான படத்தை பார்த்தில்லை என்கிற ரீதியிலான கருத்துகளையும் பகிர்ந்திருக்கிறார்.

இணையத்தில் ராம்கோபால் வர்மாவின் இந்த பேட்டி வைரலானதை தொடர்ந்து முன்னணி ஊடகங்களிலும் அது தலைப்பு செய்தியாக மாறி இருக்கிறது.

இதையடுத்து ரஜினி ரசிகர்கள் பலரும் இயக்குனர் ராம்கோபால் வர்மாவிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சூப்பர் ஸ்டார் அவருடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்த காட்சியை சமூக வலைதளத்தில் தொடர்ந்து பகிர்ந்து வருகின்றனர்.

தலைவரின் இந்த Performance-க்கு முன், பிக்கு ஹாத்ரே ஒன்றுமே இல்லை என ஆறிலிருந்து ஆறுபது வரை திரைப்படம் முதல் சமீபத்தில் வெளியான வேட்டையன் வரை பல Reference வீடியோக்களை Ram Gopal Varma-வின் பார்வைக்கு என பதிவிட்டு வருகின்றனர்.

ரஜினிகாந்த் மிக சிறந்த நடிகர் என்பதை அவருடன் பணியாற்றிய அனைத்து இயக்குனர்களுமே வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார்கள். ஆனால், உண்மையில் சூப்பர் ஸ்டாரை க்ளாஸாக காட்டுவதை விட மாஸ்ஸாக காட்டவே அனைவரும் விரும்பி இருக்கிறார்கள்.

சிறந்த நடிப்பு, சிறந்த கதாபாத்திரம் மூலம் கிடைக்கும் பாராட்டையும், விருதையும் விட, பணம் போட்ட புரடியூசரும், டிக்கெட் வாங்கி படம் பார்க்க வரும் தன்னுடைய ரசிகர்களுமே முக்கியமென ரஜினிகாந்தே பலமுறை ஓப்பனாக பேசி இருப்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ரஜினிகாந்த் என்றால் ஸ்டைல், அவர் வழி எப்போதும் தனி வழி என்பதால் இதுப்போன்ற மோசமான விமர்சனங்களுக்கு ரஜினி ஸ்டைலிலேயே ரசிகர்கள் இப்படி ஜாலியாக பதிலடி கொடுத்திருக்கிறார்கள்.


Next Story

மேலும் செய்திகள்