மேலிடத்துக்கு சென்ற வீடியோ ஆதாரம் - சிக்கலில் சூரி.. மதுரை முழுக்க இதான் பேச்சு

x

மேலிடத்துக்கு சென்ற வீடியோ ஆதாரம் - சிக்கலில் சூரி.. மதுரை முழுக்க இதான் பேச்சு.. காட்டுத்தீயாய் பரவும் தகவல்


நடிகரின் சூரியின் உணவகத்தில் சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரிக்கப்பட்டதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அது குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு

வெண்ணிலா கபடி குழு என்ற திரைப்படம் மூலம் பிரபலமான காமெடியனாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார் நடிகர் சூரி.அதன் பின்னர் பல முன்னணி கதா நாயகர்களுடன் ஜோடி போட்டு நடித்து பிரபலமானார்.

60க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த சூரி வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை என்ற படத்தின் மூலமாகக் கதாநாயகனாக அறிமுகமானர். அடுத்தடுத்த சில படங்களிலும் கதாநாயகனாகவும் ஒப்பந்தமாகியுள்ளார்.

ஒரு புறம் திரைப்படங்களில் பிஸியாக இருக்கும் சூரி தனது சொந்த ஊரான மதுரையில் அம்மன் உணவகம் என்ற பெயரில் 10க்கும் மேற்பட்ட உணவகங்களைத் தொடங்கி நடத்தி வருகிறார்.

அந்த வகையில் கடந்த இரு வருடங்களுக்கு முன் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அம்மன் உணவகத்தின் கிளையைத் தொடங்கி வைத்தார்.

இரு ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் இந்த உணவகத்தில் சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரிக்கப்படுவதாகவும், கழிவு நீர்த் தொட்டிகள் இருக்கக் கூடிய பகுதிகளில் தான் ஹோட்டலுக்கான காய்கறிகள் வெட்டப்படுவதாகவும் சமூக ஆர்வலர் முத்துக்குமார் என்பவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்து இருக்கிறார்.

மேலும் பெருச்சாளி மற்றும் கரப்பான் பூச்சி ஆகியவை இருக்கக் கூடிய இடங்களில் தான் உணவு தயாரிப்பதாக வீடியோ ஆதாரத்துடன் புகார் அளித்திருப்பதாக முத்துக்குமார் தெரிவித்து இருக்கிறார். மேலும் ஹோட்டலுக்கு என்று அனுமதிக்கப்பட்ட இடத்தை விட இரு மடங்கு இடத்தை ஆக்கிரமித்து இருப்பதாகவும் அவர் கூறி இருக்கிறார். இவ்வாறு விதிகளை மீறியுள்ளதால் நடிகர் சூரியின் ஹோட்டலுக்கு சீல் வைக்குமாறும் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து இருப்பதாகக் கூறினார்.

இந்த விவகாரம் மதுரை முழுவதும் வேகமாகப் பரவிய நிலையில் இது குறித்து விளக்கமளித்துள்ள ஹோட்டல் நிர்வாகம் நடிகர் சூரியின் மீதுள்ள காழ்ப்புணர்ச்சி காரணமாகத் தனி நபரின் தூண்டுதலின் பேரில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

மேலும் மருத்துவமனையில் கூடுதல் இடம் கேட்டு அதற்கான வாடகையையும் செலுத்தி வருவதாகவும் தெரிவித்த நிர்வாகத்தினர் உணவுகள் சுத்தமான முறையில் தயாரிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

சமூக ஆர்வலர் ஒருவரின் புகாருக்கு நடிகர் சூரியின் ஹோட்டல் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ள நிலையில்

சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளின் விசாரணையில் தான்

புகாரின் உண்மை தன்மை தெரியவரும்.


Next Story

மேலும் செய்திகள்