சிவகார்த்திகேயனின் 25வது பட அறிமுக டீசர் அப்டேட்
சிவகார்த்திகேயனின் 25வது படத்தின் அறிமுக டீசர் மாலை வெளியாக உள்ளது. சுதா கொங்கரா இயக்கும் இந்த படத்தில், சிவகார்த்திகேயனுடன் அதர்வாவும், முக்கிய கதாபாத்திரத்தில் ரவி மோகனும் நடிக்கின்றனர். இந்த படத்தின் அறிமுக டீசர் மாலை 4 மணிக்கு வெளியாகும் என்ற அறிவுப்புடன் படக்குழு போஸ்டரை வெளியிட்டுள்ளது. தீ பரவட்டும் என்ற வாசகம் மற்றும் கையில் பெட்ரோல் குண்டுடன் சிவகார்த்திகேயன் நிற்கும் போஸ்டர் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த படத்திற்கு பராசக்தி என தலைப்பு வைக்கப்பட்டதாக தகவல் பரவி வருகிறது.
Next Story